
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தற்போது தனது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் துணைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது உறுதியாகிவிட்டது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது அதிமுக-பாஜக-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்காது என நிர்மல் குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் பாஜக தங்களின் கொள்கை எதிரி எனவும் கூறியுள்ளார்.