பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதுகுறித்து ஆலோசிக்க பாஜக முக்கிய தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது 9 மாநில தேர்தல், அடுத்த தலைவர் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.