கடந்த சில நாட்களாகவே பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருந்த பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார். அவருக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிடி.நிர்மல் குமார் வழியில் பயணிப்பதில் தான் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.