பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசியில் சேர்க்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரநிலைகள் பாசுமதி அரிசி வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை நிறுவுவதையும் உள்நாட்டிலும் உலக அளவிலும் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என  இந்திய அரசு தெரிவித்துள்ளது.