பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு. சண்டிகரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னதாகவே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரக்கூடிய சூழலில், இதுபோன்று ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது என்பது மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.