சுரங்க தொழிலாளர்கள் 22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சுரங்க தொழிலாளர்கள் 22 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.