நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். சுமார் 30 வினாடிகள் நீடித்ததால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து பீதியில் உறைந்தனர். கேப்ரியல் புயலால் நியூசிலாந்து கடும் சேதத்தை சந்தித்த நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் துருக்கிக்கு உதவி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.