தமிழகத்தில் கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு மறுநாள் மற்றும் சனிக்கிழமை என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது நாளை தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி வழங்கப்பட்ட பொது விடுமுறை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.