நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்..
இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை இன்று (04.02.2023 -சனிக்கிழமை) அனுப்பப்பட்டுள்ளது..
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து அதனை 05.02 2023 அன்று இரவு 7 மணிக்குள் சென்னை, ஔவை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மாளிகையில் என்னிடம் சேர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மாண்புமிகு கழக அவை தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/TytWkhzlbM
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) February 4, 2023