நாம் தமிழர் கட்சியை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்துள்ளது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் இதன் காரணமாக தான் தற்போது நாம் தமிழர் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயம் செய்யும் உழவு மற்றும் புலி ஆகிய சின்னங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரும்புச் சின்னத்தை கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.