
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சீமான் பேசியதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் அது அவருடைய தனிப்பட்ட கருத்துதான் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் விலகியுள்ளனர்.
அதன்படி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் அழகரசன், மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் பலரும் விலகி வருவது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.