நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி  சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குஅனுமதியில்லை என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.