நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் பாரபட்சமான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி புகார் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலம் முற்றிலும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறனர்.
மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த திமுக,,, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகளின் எம்பிக்கள் கலந்துள்ளனர்.