தொடரும் தாக்குதல்…. உக்ரைன் மக்கள் 7 பேர் பலியான சோகம்..!!

உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா இன்று காலை  முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்து இருந்தது. ரஷ்யா இன்று திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலக அளவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று உக்ரைன் ஆதரவு கேட்டு உள்ளது.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியதாவது, ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது. உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் என்று தெரிவித்துள்ளது..

இந்த சூழலில் சற்றுமுன் ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்தது. ஆனால் அதனை மறுத்த ரஷ்யா, உக்ரைனின் விமானப்படை தளத்தை முழுவதுமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்தது.

இந்நிலையில் உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லூகான்ஸ்க், கார்கிவ், செர்னிஹிவ்வில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தாக்கவில்லை என ரஷ்யா கூறிய நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் குண்டு மழை பொழிந்து வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *