தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக பணியிட மாற்றம் செய்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய சுகாதார திட்ட ஆணையராக இருந்த ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்திய பிரதா சாஹூ கால்நடை துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சமக்ரா ஷிக்ஷா திட்ட இயக்குனராக ஆர்த்தி ஐஏஎஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.