Breaking: தீ வைத்து எரிப்பு… கோவில்பட்டியில் உச்சகட்ட பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் பைக் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அதிமுக பிரமுகரின் பைக் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதிமுக பிரமுகர் ஆரோக்கியராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியராஜ் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமமுக மற்றும் திமுகவினர் புகார் கூறியதால் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அடையாளம் தெரியாத நபர் பைக்கிற்கு தீ வைத்துள்ளதாக தெரிகிறது.