தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நவம்பர் இரண்டாம் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத முதலே தமிழ்நாடு, புதுவை உள்ளிட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை,‌ விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இந்த 13 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த இன்று முதல் ‌7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு அடுத்த 7 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது