திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1.1. 2023 முதல் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையாக ரூபாய் 3000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி முழு நேரம், பகுதி, தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளருக்கு கருணைத்தொகை ரூபாய் 2000த்திருந்து ரூ 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால்  10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும்,  அகவிலைப்படி உயர்வால்  ஆண்டொன்றுக்கு 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.