கொளத்தூரில் ஸ்டாலின்….. சேப்பாக்கத்தில் உதயநிதி…. கெத்தாக அறிவித்த திமுக ..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளை தவிர்த்து, கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் மட்டும் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நள்ளிரவில் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கந்தர்வக்கோட்டை, கோவில்பட்டி, அரூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்திய பின்னர், மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் 13 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகின்றார். முக.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் களம் காண்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *