Breaking: திமுக வேட்பாளர் சிறைபிடிப்பு…. வெடித்தது மோதல்…!!

திமுக வேட்பாளரை சிறைப்பிடித்து தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் செல்வபுரம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சிறைப்பிடித்து தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.