BREAKING: திண்டுக்கல் மாவட்டத்திலும் லீவு விட்டாச்சு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *