
பிரபல தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர் சாமிநாதன் இன்று உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது தமிழக பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவின் முதல் மாநில தலைவர் சாமிநாதன். இவருடைய மறைவு செய்து கேட்டு மிகுந்த வருத்தம் அடைவதாகவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
சிறந்த பேச்சாளர் ஆன சாமி தியாகராஜன் அவர்கள் திருக்குறள், பெரியபுராணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் பலவற்றுக்கும் எழுதிய உரைகள் சிறப்பானவை. அவருடைய மறைவு தமிழ் மற்றும் பக்தி இலக்கிய உலகுக்கு பேரிழப்பு. மேலும் ஐயா சாமி தியாகராஜன் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.