தமிழ்நாட்டில் உள்ளாட்சி தினத்தன்று நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக அது மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசு கிராம சபை கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பொதுமக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.