தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை போலவே ஆளுணரும் அவ்வையாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.

ஆளுநர் பேசும் போது தமிழ்நாடு, தமிழ்நாடு என கோஷம் எழுப்பப்பட்டது.  இந்நிலையில்  அவருடைய பேச்சின் இடையே தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். சமீபத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று கூற வேண்டும் என்று ஆளுநர் பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.