தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை போலவே ஆளுணரும் அவ்வையாரின் பாடலை மேற்கோள் காட்டினார். ஆளுநர் பேசும் போது தமிழ்நாடு, தமிழ்நாடு என கோஷம் எழுப்பப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இடதுசாரிகள்,மதிமுக மற்றும் விசிக கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தொடர்ந்து பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கியுள்ள காலை உணவு திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது என்று பாராட்டியுள்ளார்.