BREAKING: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 23ஆம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *