BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று  முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று  தொடங்கி வைக்கிறார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவதையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *