முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமின் மனு, கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதன் தீர்ப்பினை நாளை காலை 10.30 மணிக்கு வழங்குகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்