ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. 8 பேரின் குடும்பத்தாரும் போட்டோக்களுடன் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 8ல் 3 பேர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 5 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விரைவில் அவர்களது நிலையும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.