தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை கோட்டையில் ‌ சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றிய நிலையில் அதன் பின் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் முதல் கட்டமாக 1000 இடங்களில் செயல்படுத்தப்படும்.

இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு அரசு சார்பில் 3 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் 2026 ஜனவரி மாதத்திற்குள் தமிழக முழுவதும் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அசத்தல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.