தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதன்படி கன மழை பெய்யும் போது எந்தவித பாதிப்புகளும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வரும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதி ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.