Breaking: தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் தீவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தேவையின்றி வெளியில் வரும் வாகனங்கள் மற்றும் நடமாடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *