BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் – புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் நேற்று  ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதில் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *