சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ள  நிலையில் கொரோனா சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் தேர்தலுக்கு பின் தீவிர பொது முடக்கம் அமல்படுத்தபடும் என்று மக்களிடையே நிலவி வந்த குழப்பம் மற்றும்  பொதுக்கூட்டம், உள் அரங்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவுகிறது. திருமண விழாக்கள், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில்  ஊரடங்கு ஏப்ரல் 30-வரை  நீட்டிக்கப்பட்டதோடு மேலும் கொரோனா  சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.