BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…? – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வு வழங்க பரிந்துரைக்கப்படலாம். 23 மாவட்டங்களில் 50% இருக்கைகளுடன் பேருந்தை இயக்க பரிந்துரைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *