BREAKING: தமிழகத்தில் அரசு வேலை…. பரபரப்பு அறிவிப்பு…!!!

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 2 2a ஆகிய இரு நிலைகளைக் கொண்ட தேர்வுகளை தமிழ் மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழி தான் மட்டுமே மதிப்பீடு தேர்வாக இருக்கும்.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழி தேவை கட்டாயமாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% அரசுவேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து  பேசிய அவர், மேலும் இனி வரும் காலங்களில் எந்த அரசு தேர்வாக இருந்தாலும் அடிப்படை தமிழ் புலமை அவசியம். தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்தால் மட்டுமே அரசுப் பணி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *