உலகமே அமெரிக்கா அதிபர் தேர்தலை உற்று நோக்கி வரும் நிலையில் இன்று வாக்கு முடிவுகள் வெளியாகி வருகிறது. தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 277 எலக்ட்ரோல் வாக்குகளை பெற வேண்டும்.

தற்போது வரை குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் 177 எலக்ட்ரால் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், கமலா ஹாரிஸ் 99 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். அதன் பிறகு ட்ரம்ப் மொத்தம் 15 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் கமலா ஹாரிஸ் இதுவரை 7 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.