
தலைநகர் டெல்லியில் தற்போது பாஜக கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் பாஜக வெற்றி வாகை சூடி உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. அதோடு அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் ஆகியோர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். முதல்வர் அதிஷி மட்டுமே வென்றுள்ளார்.19 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் 11 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லியில் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது ஆம் ஆத்மிகட்சி தோல்வி அடைந்ததால் முக்கிய ஆவணங்களை பாதுகாக்கும் பொருட்டு தலைமை அலுவலகத்திற்கு உடனடியாக சீல் வைக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.