மதுரையில் உள்ள அரிடாப்பட்டி பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மாநில அரசும் சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள மேலூர் உட்பட முக்கிய கிராமங்களின் தலைவர்கள் என்று டெல்லி சென்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நாளை டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இது பற்றி பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது, மதுரையில் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார். நாளை சுரங்கம் அமையும் பணிகள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக நாளை டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.