பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் காயமடைந்தது மட்டுமல்லாமல் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் கரூர் ஆர்டிமலை பகுதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் மற்றும் 400 வீரர்கள் பங்கேற்றன. போட்டியில் இளைஞர் சிவகுமாருக்கு மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.