தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில், டெட் 2-ம் தாள் கணினி வழி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை டெட் 2-ம் நாள் கணினி வழி தேர்வு நடைபெறும்.