BREAKING: மிரட்டலாக வெளியானது…. ‘பீஸ்ட்’ பட ட்ரைலர்…. வீடியோ இதோ….!!!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பிரீமியம் லார்ஜ் பார்மட் முறையில் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.

அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக திரைப்படத்தின் டிரைலர் பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாகியுள்ளது .  பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்பது முழுமையான திரை மற்றும் நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்புடன் ஐமேக்ஸ் போன்ற அனுபவத்தை தரும் வகையில் இருக்கும். பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள், படத்தின் பாடல்கள் என அனைத்தும் சாதனை படத்தைத் தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் நிறைந்த இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.  டிரைலரை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.