BREAKING : செம்பரம்பாக்கம் ஏரியில் 1,000 கனஅடி நீர் திறப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3000 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் ஏரியில் இருந்து தற்போது 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கரையோரம் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *