தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறுப்பினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறது