செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மற்றும் அமலாக்கத்துறை கஸ்டடி கேட்ட மனு இரண்டிலும் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி கூறியிருக்கிறார். இந்த இரண்டு மனுக்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அந்த தீர்ப்பினை படித்துவிட்டு நாளை தீர்ப்பளிக்கிறார் நீதிபதி அல்லி.