சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது தமிழக அரசு சார்பில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுணக்கம் காரணமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மரங்களை அகற்றும் விஷயத்தில் முன்னேற்றம் காட்ட அரசுக்கு அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் சீமை கருவேல மரங்களை அகற்றும் படி அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் அறிவுறுத்தலாம் என அறிவுறுத்தினர். மேலும் சீமை கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.