நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது விஜயை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் சீமான் விமர்சித்ததாக கூறினாலும் அவரின் கட்சி கொள்கைகள் அழுகிய கூமுட்டை என்றும் லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் என்றும் விமர்சித்தார்.
அதோடு விஜய்யை மிகவும் மோசமான வார்த்தைகளாலும் சாடினார். இருப்பினும் விஜய் சீமானை விமர்சிக்க கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதோடு செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த கட்சி நிர்வாகிகளிடம் சீமான் பற்றி கேட்டாலும் அவர்கள் பதில் சொல்ல மறுத்தனர். இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய x பக்கத்தில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் இது தொடர்பான எக்ஸ் பதிவில் என் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக சீமான் அண்ணன் தம்பி உறவு எல்லாம் கிடையாது என்று விஜயை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் சகோதரர் என்று கூறியதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) November 8, 2024