கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 1892 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 1917 ரூபாயாக உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,068.50 ரூபாயாக நீடிக்கின்றது.