தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரமாக வியாபாரிகள் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது சாலையோர வியாபாரிகள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியது. அதாவது ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்று கொண்டிருந்த நிலையில் திடீரென தறிக்கட்டு லாரி ஒன்று வேகமாக வந்தது.
அந்த லாரி அவர்கள் மீது மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பலத்த காயங்களுடன் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக பலி எண்ணிக்கை அஞ்சக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.