நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 9-12 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, இலவச வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பை முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். ரூ. 1000 ரொக்கத்தை உரிய நபர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.